தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான நடிகை மீனா, திருமணத்திற்குப் பிறகு தமிழில் முதன்முதலாக நடிக்கும் வலைதள தொடரான ‘கரோலின் காமாட்சி’ என்ற தொடரில் கெட்ட வார்த்தையை பேசி நடித்திருக்கிறார்.
முன்னணி நடிகையான மீனா, திருமணத்திற்குப் பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர்,ஆறேழு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் முதன்முதலாக கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள வலைதள தொடரான ‘கரோலின் காமாட்சி’ என்ற வலைத்தளத் தொடரில் இவர் காமாட்சியாக நடித்திருக்கிறார்.
நாளை முதல் ‘ஜீ 5’ என்ற செயலியில் மட்டும் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான ‘கரோலின் காமாட்சி’ என்ற தொடரில் நடிகை மீனா நடித்திருக்கிறார். இந்தத் தொடரின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் காமாட்சியாக நடித்திருக்கும் மீனா கெட்ட வார்த்தை ஒன்றை பேசுகிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விவேக் பேசுகையில்,
“பொதுவாக வலைதள தொடர்கள் பிரத்தியேக செயலியில் மட்டும் ஒளிபரப்பாகும். அதனையும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே காண்பதால், அவர்களை ஈர்க்கும் வகையில் அத்தகைய வசனங்கள் இடம் பெற்றது. ஆனால் இந்த தொடரினை தொடர்ந்து நீங்கள் பார்க்கும் பொழுது நடிகை மீனா பேசிய அந்த கெட்ட வார்த்தை கொமடியாக இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.” என்று விளக்கம் கொடுத்தார்.
கரோலின் காமாட்சி என்ற மலைத்தொடர் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில்,
“ இந்த தொடர் வித்தியாசமான புலனாய்வு தொடர். புலனாய்வு துறையில் கருணை அடிப்படையில் பணிக்கு சேர்ந்திருக்கும் காமாட்சி என்ற பிராமணப் பெண்ணான மீனா, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனான வில்லனை எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இதை எக்சன், நாடகம், சென்டிமென்ட் மற்றும் கொமடி என மல்ட்டிபுள் ஜேனரில் இருக்கும்.” என்றார்.
நாச்சியார் பட டீஸரில் நடிகை ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை எப்படி இணையத்தில் வைரலானதோ, அதே போல் கரோலின் காமாட்சி என்ற வலைத்தள தொடரில் நடிகை மீனா பேசிய கெட்டவார்த்தையும் பிரபலமாகும் என்கிறார்கள் இணையவாசிகள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM