சூடான் நாட்டில் எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில்  நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டின் கார்டம் நகரில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில்  நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் தீ பற்றியது.

சூடான் நாட்டின் கார்டம் நகரில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில்  நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் தீ பிடித்தது. 

இதில் இந்திய தொழிலாளர்கள் உட்பட 23 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 

மேலும் இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.