ஜப்பானைச் சேர்ந்த  ஒஹாமோடோ என்ற 70 வயது முதியவர் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்.  தற்போது பென்சன் பணத்தில் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார். 

இவர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு  24 ஆயிரம் முறை தொடர்பு கொண்டு செய்து பீதியை ஏற்படுத்திய சம்பவம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானைச் சேர்ந்த கே.டி.டி.ஐ என்ற நிறுவனத்தின் சிம் அட்டையை பயன்படுத்தி வரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் மட்டும் ஒரே வாரத்தில் 411 முறை இவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 

தொலைப்பேசியில் இவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சந்தேகத்தைக் கேட்பார். பல சமயம் ஏற்கனவே கேட்ட சந்தேகங்களையும் கேட்பார்.

ஒரு வாரமாக வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு இப்படி ஒருவர் தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்வதை அங்கு பணியாற்றியவர்கள் கண்டுபிடித்தனர். 

இது குறித்து மேலிடத்திடம் குறித்த நிறுவன ஊழியர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட நம்பரிலிருந்து எத்தனை முறை அழைப்பு வந்துள்ளது எனச் சோதித்த போது சராசரியாக ஒரு நாளுக்கு 33 முறை அந்த நம்பரிலிருந்து வாடிக்கையாளர் மையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 

மேலும் அந்த நிறுவனம் இதுவரை அவர் எத்தனை முறை தொலைபேசி அழைப்பு செய்துள்ளார் என சோதனை செய்து பார்த்த போது அவர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 23 ஆயிரம் முறை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசி அழைப்பு செய்துள்ளது தெரியவந்தது.