ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக படகுகளில் சென்ற குடியேற்றவாசிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இது கடந்த வருடத்துடன் ஒப்படும் போது 35 சதவீதமாக  உயர்ந்துள்ளது.

குறித்த புள்ளிவிவரங்கள் குடிவரவு அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மேலும் கண்டறியப்படாத நூற்றுக்கணக்கான படகுகளில் மூழ்கி பலியானோரை கணக்கில் எடுத்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் துருக்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் கீரீஸ் குடியேற்றவாசிகளின் குடியேறும் முயற்சிகள் குறைந்துள்ளதாகவும் ஆப்பிரிக்கா, மேற்கு திரிப்போலி மற்றும் லிபியா நாடுகளில் இருந்து மிகவும் ஆபத்தான மத்தியத்தரை கடலினூடாக இத்தாலிக்கு செல்கின்றனர்.

குறித்த கடல்வழியான பயணம் மூலம் கடந்த வாரத்தில் மாத்திரம் 880க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.