கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வத்தளை பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய சீருடையுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

தேசிய பாதுகாப்புக்காக கடற்படை மற்றும் பொலிஸார் மேற்கொள்கின்ற கூட்டு நடவடிக்கைகளின் போதே வத்தளை பகுதியில் உள்ள வீதி சோதனை நடவடிக்கையின்போது, நிர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்று வழிமறித்து சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த லொறியில் இருந்து சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்திய சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, லொறிச் சாரதி தெளிவான விளக்கங்களை வழங்கத் தவறிய நிலையில், சந்தேக நபரா லொறிச் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் கூடலுஒயா பகுதியில் வசிக்கும் 23 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் சம்பவம் குறித்து வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.