13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்­ரல்-,மே மாதங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தப் போட்­டிக்­கான வீரர்கள் ஏலம் கொல்­கத்­தாவில் எதிர்­வரும் 19ஆம்  திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

ஐ.பி.எல். ஏலப்­பட்­டி­யலில் மொத்தம் 971 வீரர்கள் இடம்பெற்­றுள்­ளனர். இதில் 713 பேர் இந்­தி­யர்கள். மீதி­யுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்­த­வர்கள். இந்தப் பட்­டி­யலில் இலங்கை வீரர்கள் 39 பேர் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.  இதி­லி­ருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஏலப்­பட்­டி­யலில் இடம்பெற்­றி­ருப்­ப­வர்­களில் 215 வீரர்கள் சர்­வ­தேச போட்­டியில் ஆடி­ய­வர்கள். 754 பேர் உள்ளூர் போட்­டி களில் விளை­யா­டி­ய­வர்கள்.

வெளிநாட்டு வீரர்­களில் அதி­க­பட்­ச­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து 55 பேர் ஏலப்­பட்­டி­யலில் உள்­ளனர்.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக தென்­னா­பி­ரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39), மேற்­கிந்­தியத் தீவுகள் (34), நியூஸி­லாந்து (24), இங்­கி­லாந்து (22), ஆப்­கா­னிஸ்தான் (19), பங்­க­ளாதேஷ்(6) ஆகிய நாடுகள் உள்­ளன.அமெ­ரிக்­காவிலிருந்து ஒரு வீரரும் இதில் இடம்பெற்­றுள்ளார்.

சர்­வ­தேசப் போட்­டியிலிருந்து சில மாதங் கள் ஒதுங்கியிருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏலப் பட்­டி­யலில் இடம்பெற்­றுள்ளார். அவ­ருக்­கான அடிப்­படை விலை இந்­திய ரூபா மதிப்பில் ரூ.2 கோடி­யாக விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ் (அவுஸ்­தி­ரே­லியா), அஞ்­சலோ மெத்யூஸ்(இலங்கை), ஸ்டெய்ன் (தென்­னா­பி­ரிக்கா) ஆகி­யோ­ருக்கும் அடிப்­படை விலை­யாக ரூ.2 கோடி நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய ரூபா  மதிப்பில் 1 கோடிக்கு விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள வீரர்கள் பட்­டி­யலில் ரொபின் உத்­தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்­சட்சன், மோர்கன், ஜேசன் ரோய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.