மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதேவேளை இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இன்று (01) கொழும்பு போக்குவரத்து பிரிவு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் குடிபோதையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலான இரண்டு குற்றங்களுக்காகவே மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.