இலங்கை இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவு முறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை இந்திய இராணுவ படையணிகள் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் அப்பியாச பயிற்சிகள் தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக பூனையிலுள்ள அன்ட் இராணுவ நிலையத்தில் இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பமானது.

இந்த அப்பியாச பயிற்சி ஆரம்ப நிகழ்விற்கு இந்திய இராணுவத்தின் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் அவர்கள் வருகை தந்து ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த 11 அதிகாரிகள் மற்றும் 109 படை வீரர்கள் இந்த அப்பியாச பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து கடந்த நவம்பர் மாதம் (29) ஆம் திகதி மாலை இந்தியாவை நோக்கி புறப்பட்டனர்.

இந்திய இராணுவத்திலுள்ள குமணன் படையணி இந்த மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்றிக் கொண்டனர்.

‘மித்ரா சக்தி’ அப்பியாச பயிற்சி ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் தற்போதைய இயக்கவியல் நடைமுறை மற்றும் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் தந்திரோபாய பயிற்சிகள் மூலம் இணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.