துனிசியாவின் தலைநகரான துனிசில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆபிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிசில் இருந்து அயின் தரஹாம் நகருக்கு சுமார் 50 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில் சாரதியின் கட்டுபாட்டை இழந்து  பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதிலேயே 26 பேர் உயிரிந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த விபத்தில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள வீதியினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு,  பாதுகாப்பற்று காணப்படும் வீதிகளை சரிசெய்து தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.