நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்து இங்கினிமிட்டியா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இங்கினிமிட்டியா நீர்த்தேக்கத்தில் சுமார் 4000  கன அடிக்கு மேல் நீர் நிரம்பி காண்பபடுவதால் தம்போவ ஆற்றிற்கு திறந்து விடப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த ஆற்றை அன்மித்து வாழும் மக்கள் சற்று அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.