ஜோர்தான் நாட்டில் ஒரு பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 13 பாகிஸ்தான் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை தலைநகர் அம்மானுக்கு மேற்கே கிராமப்புறமான தெற்கு ஷுனேவில் உள்ள பண்ணையில் தகர வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

இத்தீவிபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

ஜோர்தான் பிரதமர் உமர் அல்-ரஸாஸ் பாகிஸ்தான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோர்தான்  நாட்டில் தெற்கு ஷுனேவில் உள்ள பண்ணையில் பல பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடாகப் பயன்படுத்தப்படும் தற்காலிக கட்டிடங்களில் இரண்டு குடும்பங்கள் வசித்து வந்தன.

ஜோர்தான் பள்ளத்தாக்கிலுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனியார் பண்ணைகளில் வேலை செய்கிறார்கள், அவர்களில் பலர் மோசமான தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.