மண்சரிவு கண்காணிப்பு கருவிகளை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா

Published By: Digital Desk 3

03 Dec, 2019 | 05:01 PM
image

களுத்துறை நிக்கஹர, பிரதேசத்தில் காணப் டும் மண்சரிவு அபாயத்தை மேலும் வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதற்காக இலங்கையின் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மண்சரிவு கண்காணிப்புக் கருவிகளை ஐக்கிய அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதன் ஒரு  பகுதியாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வைச் சேர்ந்த (USGA) பொறியியலாளர்கள் மற்றும் புவியியலளார்கள் கடந்த நவம் ர் 5 ஆம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, இலங்கை விஞ்ஞானிகளுடன்  பங்காண்மையுடன் இந்த உ கரணங்களை நிறுவுவது மற்றும் அவற்றை  பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடிருந்தனர்.

இதனால் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு மண்சரிவு அபாயம் இருக்கும்  பகுதிகளை உடனடியாக அடையாளம் கண்டு மண்சரிவு ஏற்டக் கூடிய ஆபத்துக்கள் மற்றும் சொத்து சேதங்கனைத் தடுக்க முடிந்துள்ளது.

'சிறப்பான தயார்ப்படுத்தல் உயிர்களை  பாதுகாக்கும்,' என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார். 'இந்த    உகரணங்களை  பயன்படுத்தி கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மண்சரிவு ஏற்டக் கூடிய  பிராந்திய இடங்களை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை வெளியிட முடியும். இது கிராம மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும்,' என்றார்.  

பருவகால மழைவீழ்ச்சி,சனத்தொகை அதிகரிப்பு மற்றும் மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டுமானங்கள் காரணமாக இலங்ககயில் மண்சரிவுகள் ஏற் டுவதற்கான வரய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. நரன்கு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இந்த உ கரணங்ககைப்  பயன்படுத்தி கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் நிலமட்ட நீர் மற்றும் மழைவீழ்ச்சி எனபவற்றைக் கண்காணித்து மண்சரிவு அபாயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். 

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் குழுவினர் மண்சரிவு ஏற்படும் இடங்களை அடையாளம் காணுதல், இடவியல் தரவுககை  பயன்படுத்துவது, அனர்த்த  பதிலிறுப்பு நேரங்களில் விஞ்ஞானிகளின்  பங்களிப்பு ஆகியவை தொடர்பில் கட்டட ஆரரய்ச்சி நிறுவனத்தின்  பணியாளர்களுக்கு செயலமர்வுகளையும் நடத்தியிருந்தனர்.

ஒளி கண்டறிதல் மற்றும் வரம்புமுறையை (LiDAR)  பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களை எவ்வரறு  பயன் டுத்துவது, நிலத்தின் மேற்பகுதியில் நிலைமைகளை அளவிடுதல் போன்ற விடயங்கள்  பற்றியும்  பங்குபற்றியவர்கள் தெரிந்து கொண்டனர். களத்திலிருந்து மண்சரிவு  பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கான தொழில்நுட்பம், டப்லெட் கணனிகளைப்  பயன்படுத்தி களத்திலிருந்து தகவல்களை சேகரித்தல் போன்றவை குறித்தும் செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.  

உபகரணங்கள், நிறுவதல் மற்றும் ஆய்வுக்கான  பரிமாற்றங்கள் என்பவற்றுக்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் (USAID) வெளிநாட்டு அனர்த்த உதவி அலுவலகத்தின் (OFDA) ஊடரக  உதவி வழங்கப்படுகிறது. 2018 ஆண்டு முதல் USGA மற்றும் USAID/OFDA என்பன மண்சரிவு அபாயங்களைக் குறைத்து உயிர்களைப்  பாதுகாக்க கட்டட ஆரய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38