பொதுவாக எம்மில் பலரும் சாதாரணமாக இருமும் போதும், தும்மும் போதும் கூட சிறுநீர் கசிவு ஏற்பட்டு, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது.

சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடற்ற நிலையைத்தான் சிறுநீர் கசிவு என்கிறார்கள். சிறுநீர்ப்பையில் இரண்டு வால்வுகள் உள்ளன. இவை பலவீனம் அடைவதால் தான் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. முதுமை மற்றும் அழுத்தம் காரணமாகவும், நோய் போன்றவற்றின் காரணமாகவும் இத்தகைய வால்வுகள் பலவீனமடைகின்றன. 

நீரிழிவு நோயாளிகள் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் போது, சிறுநீர்ப்பையில் உள்ள வால்வில் அழுத்தம் உண்டாகிறது. இதன் காரணமாக அந்த வால்வு வலிமை இழக்கிறது. இதுவே சிறுநீர் கசிவுக்கு காரணமாகிவிடுகிறது.

அதேபோல் சிறுநீர்ப்பையிலுள்ள வால்வுகள் பலவீனமடைவதன் காரணமாகவும் இத்தகைய பிரச்சினை ஏற்படக்கூடும். இவர்களுக்கு தற்பொழுது சிறுநீர்ப்பையில் செயற்கை வால்வு பொருத்தும் சிகிச்சை (Tape Mechanical Occlusive Device )  அறிமுகமாகி பலனளித்து வருகிறது. 

இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பின்னர் அவர்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சிறுநீர் கசிவு பிரச்சினை இருப்பவர்கள் வைத்திய பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வதுடன், குறிப்பிட்ட கால அவகாச இடைவெளிகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.