கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடைவிதித்துள்ளது.

அத்துடன் அவரை எதிர்வரும் 09 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.