காற்றின் வேகம் திடீரென அதிகரிப்பதால் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும் என்றும், இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடலுக்கு படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் வானிலை தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வானொலி தொடர்பு சாதனங்களை செயலில் வைத்திருக்குமாறும் மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.