அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு  எதி­ராக கண்­டனத் தீர்­மா­னத்தைக் கொண்டு வரும் முக­மாக  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையில் நாளை புதன்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள விசா­ர­ணை­களில் ஆஜ­ராகப் போவ­தில்லை என  அமெ­ரிக்க வெள்ளை மாளிகை அறி­வித்­துள்­ளது.

 ட்ரம்ப் மேற்­படி விசா­ர­ணை­களில் பங்­கேற்க எதிர்­பார்க்­க­வில்லை என வெள்ளை மாளிகை சட்ட ஆலோ­சகர் பட் சிப்­பலோன் பாரா­ளு­மன்ற  பிர­தி­நி­திகள் சபை­யின் நீதி சபைக்கு  அனுப்பியுள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையின் தலைவர் ஜெர்ரோல்ட் நட்லர் கூறு­கையில், ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்   விசா­ர­ணையில் ஆஜ­ராக வேண்டும் அல்­லது அது தொடர்பில் முறைப்­பாடு செய்­வதை நிறுத்த வேண்டும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

அதே­ச­மயம் இரண்­டா­வ­தாக இடம்­பெறும் விசா­ர­ணையில் ட்ரம்ப்  கலந்து கொள்­வாரா இல்­லையா என வெள்ளை மாளிகை எத­னையும் குறிப்­பிட்டுக் கூற­வில்லை.

 மேற்­படி விசா­ர­ணையில் செயற்­கி­ரமம் மற்றும்  அடிப்­படை நீதி என்­ப­வற்றில் முழு­மை­யான குறை­பாடு உள்­ள­தாக சிப்­பலோன் அந்தக் கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார். நாளை 4ஆம் திகதி  புதன்­கி­ழமை இடம்­பெறும் விசா­ர­ணையில் ஆஜ­ராக விடுக்­கப்­பட்ட அழைப்பில் விசா­ர­ணைக்கு தயா­ராகும் சரி­யான நேரம் மற்றும்  சாட்­சிகள்  தொடர்­பான தக­வல்­களை வெள்ளை மாளி­கைக்கு வழங்கத் தவ­றி­யுள்­ளமை கார­ண­மாக  ட்ரம்ப் அந்த விசா­ர­ணையில் கலந்து கொள்ளும் சாத்­தி­ய­மில்லை  என அவர் கூறினார்.

பாரா­ளு­மன்ற கீழ் சபையால் 3 சாட்­சி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் ட்ரம்பின் குடி­ய­ரசுக் கட்­சிக்கு ஒரே­யொரு  சாட்­சிக்கு மட்­டுமே அழைப்பு விடுக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

நாளை இடம்­பெ­ற­வுள்ள  விசா­ரணை  ட்ரம்­பிற்கும் உக்­ரே­னிய ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்­க்­கு­மி­டை யில் கடந்த ஜூலை மாதம் இடம்­பெற்ற தொலை­பேசி அழைப்பை மைய­மாகக் கொண்­ட­மை­ய­வுள்­ளது.

இந்தத் தொலை­பேசி அழைப்பின் போது ட்ரம்ப் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்­சியின் சார்பில்  போட்­டி­யிட எதிர்­பார்த்­துள்ள வேட்­பா­ள­ரான ஜோ பிடெ­னுக்கும் அவ­ரது மகன் ஹன்­ட­ருக்கும்  எதிரான விசாரணைகளை ஆரம்பிக்க உக்ரேனிய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஹன்டர் முன்னர் உக்ரேனிய சக்தி வளக் கம்பனியான புறிஸ்மாவில் பணியாற்றி யிருந்தார்.