மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவை சந்தித்த ரஜினி, அவரது காலை பிடித்து கைகொடுத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைந்து தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருகிறார்.
கடந்த மாதம் கேரளாவில், பேரிடர் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்றிறுந்த கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் தனது காலால் இவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இவரை வலைதளங்களில் பிரபலமடைய செய்தது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க பிரணவ் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து, 20 நிமிடம் நேரம் ஒதுக்கினார் ரஜினி. இந்நிலையில், சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினி - பிரணவ் சந்திப்பு நேற்று (2ஆம் திகதி) இடம்பெற்றது.
இதன்போது, பிரணவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற ரஜினி, பிரணவின் காலினை தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார்.
இதையடுத்து, தனது காலால் வரைந்த ரஜினியின் படத்தை, அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM