ஈரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஈரானில் எரி­வாயுப் பொருட்­களின் விலை உயர்விற்கு  எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டு பொதுமக்களை அந்நாட்டு அரச படையினர் கட்டுப்படுத்த முயன்றபோது பொதுமக்கள் மீது மீது தாக்குதலை மேற்கொண்டனர். 

இதில் 208 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு , பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நேற்றைய தினம் சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் ஈரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அந்நாட்டுப் படையினரின் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான ஆதாரங்கள் கிடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த வாரம் உக்கிரம் அடைந்த ஆர்ப்பாட்டத்தின்போது  சுமார் 731 வங்­கி­களும், 140 அரசு அலு­வ­லகங்­களும் எரிக்­கப்­பட்­டன. 70 பெற்றோல் நிலை­யங்­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 7ஆயிரம் பேர் வன்முறைகளில் ஈடுபட்டனர் என அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்கள் வன்முறைகளில் ஈடுபடுக்கின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் . இதில் பலர் கொல்லப்பட்டனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது.

இவ்வாறு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் அறிந்து உண்மை தன்மையை வெளிபடுத்த முடியும் என மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.