அமெரிக்காவின், நியூயோர்க் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக சுமார் 700 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயோர்கின் நியூ ஜெர்சி மற்றும் நியூ இங்கிலாந்து போன்ற இடங்களிலேயே இந்த பனிப்பொழிவு பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணாக நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ‍மேலும் 5,200 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.

அத்துடன் நியூயோர்க்கில் உள்ள ஏழு மாவட்டங்களில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவ‍ேளை பனிப்பொழிவு காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அநாவசிய போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் திங்கட்கிழமை இரவு 19,000 க்கு மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.