இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் கடல் பாதுகாப்பு, மீன்பிடி, தகவல் தொழில்நுட்பம், பசுமை சக்தி, வேலைவாய்ப்பு, பெண்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சி போன்றவற்றுக்கான் எமது ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்குவோம். என அதில் இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.