வெளிநாட்டிலிருந்து ஒரு தொகை சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்த முற்பட்ட இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

றாகம, அங்கொட பகுதியைச் சேர்ந்த 20 வயதான சந்தேகநபர்களையே இவ்வாறு கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் டுபாயிலிருந்து ஒமானுக்குச் சென்றுவிட்டு இன்றையதினம் மீண்டும் இலங்கைக்கு வரும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப் பொதியைச் சோதனை செய்தபோது  123 பக்கட்டுகளில் 25 ஆயிரத்து 720  வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் சிகரெட்டுக்களை மீட்டுள்ளதோடு அதன் பெறுமதி  சுமார் 22 கோடியே 80 இலட்சம் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேதிக விசாரணைகளைச் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.