பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு முயற்சி?

03 Dec, 2019 | 11:15 AM
image

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் எனதெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் உத்தியோகப்பற்றற்ற தடையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து விசாரணைகள் முடிவடையும் வரை அவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதை தடை செய்வதற்கான உத்தியோகப்பற்றற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட பணியாளரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அவரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள்  இடம்பெறுவதாக முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானநிலைய ஊழியர்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம், நடந்தது என்னவென்பதை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளிப்பது அவசியம் என முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட பணியாளரிடமிருந்து இதுவரை சிஐடியினர் வாக்குலம் பெறவில்லை என்;பதையும்  அரசவட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை  பாதிக்கப்பட்டவரின்  அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என சிஐடியினர் தெரிவிப்பதாக  டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21