ரஷ்யாவின் ஓரன்போர்க்கில் உள்ள ஜாகோரோட்னோய் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த சம்பவம் அந் நாட்டு நேரப்படி இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதகதியில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஒரு டிரக் வண்டியொன்றும் கார் ஒன்றும் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.