(செ.தேன்மொழி)

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ள  உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளான சிசிரத ஆப்புரு , பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்ந்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விசாரணைக்கு எடுப்பது குறித்து மூவரடங்கி நீதிபதி குழு அறிவித்தலை விடுத்துள்ளது.

சட்டமாதிபருக்கு பதிலாக மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டதரணி சஞ்ஜய ராஜபக்ஷவினால் இந்த குற்றப் பத்திரிகை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.