குலசேகர ஓய்வு

By MD.Lucias

01 Jun, 2016 | 10:11 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர,

உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவே சரியான நேரம். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் பிரகாசமாக விளையாட முடியும் என நினைக்கின்றேன்.  

33 வயதுடை  நுவான் குலசேகர  இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி   பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right