சிரியாவில் ரஷ்ய பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குழாய்க் குண்டுத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

வடக்கு சிரியாவல் உள்ள அலெப்போ கவர்னரேட் என்ற மாவட்டத்திலுள்ள கோபேன் நகரத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட ரஷ்ய பொலிஸ் வாகனம் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பில் குறித்த வாகனத்திலிருந்த மூன்று ரஷ்ய இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், வாகனமும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.