நடிகை அஷ்ரிதா ஷெட்டியை காதலித்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே  இன்று (02.12.2019) முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், கௌதம் கார்த்திக் ஜோடியாக இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அஷ்ரிதா ஷெட்டிக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இவர்கள் காதல் விவகாரம் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்தது. தற்போது மனிஷ் பாண்டே உறவினர்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.