மெக்ஸிகோ நாட்டின் கோஹுய்லா மாநிலத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதியொன்றில் ஆயுதமேந்திய கும்பலுடன் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை டெக்சாஸ் எல்லைக்கு அருகிலுள்ள சிறிய நகரமான வில்லா யூனியனில் கொல்லையிடுவதற்காக வந்த துப்பாக்கிகளுடன் வந்த குழுவினரே மேற்படி மோதலில் ஈடுப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவமானது, சுமார் 17 வாகனங்களில் வந்த 60 க்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரிகளை கொண்ட குழுவால் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பொலிஸார் மற்றும் குறித்த குழுவுக்கிடையில், ஒன்ரறை மணித்தியாலங்களிற்கும் மேலாக இடம்பெற்ற தாக்குதலில் வில்லா யூனியன் மேயரின் அலுவலகங்கம் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளது. 

இதனிடையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் பாதுகாப்புப் படையினர் 14 துப்பாக்கிதாரிகளைக் கொன்றுள்ளதாக வடக்கு மாநிலமான கோஹுயிலாவின் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.