இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், அறிமுக நாயகன் விஷ்வா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சாம்பியன்’ படத்தின் இசை வெளியாகியிருக்கிறது.

வெண்ணிலா கபடிகுழு, ஜீவா, கென்னடி கிளப் போன்ற விளையாட்டு துறை சார்ந்த படங்களை இயக்கி, திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், புதிதாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சாம்பியன்’. உதைபந்தாட்டத்தை மையப்படுத்தி இருக்கும் 

இந்த படத்தில் விஷ்வா என்ற புதுமுக நாயகன், கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இவருடன் ‘டப்ஸ்மாஷ்’ புகழ் மிருணாளினி ரவி, ‘கைதி’ பட புகழ் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஆரோல் கோரலி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை இன்று வெளியானது.

இதனிடையே அறிமுக நாயகன் விஷ்வா குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியிருக்கிறது. இவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் அவர்களின் சகோதரி ராகவி அவர்களின் வாரிசு இவர் என்றும், இவர் முன்னாள் தேசிய நீச்சல் வீரர் என்றும், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் என்றும், நடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

அத்துடன் இந்த படத்தை ராகவி அவர்களே தயாரித்திருக்கிறார். இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.