ரஷ்­யாவின் மொஸ்கோ நக­ரி­லுள்ள  புதிய அருங்­காட்­சி­ய­கத்தில் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பணம் திணிக்­கப்­பட்ட கண்­ணா­டி­யா­லான விலை­யு­யர்ந்த அரி­யா­ச­ன­மொன்று திரை­நீக்கம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

ரஷ்ய கலை­ஞ­ரான அலெக்ஸி செர்­கி­யன்கோ கோடீஸ்வர  தொழி­ல­தி­ப­ரான ஐகோர் ரைபா­ கோ­வுடன் இணைந்து   துப்­பாக்கி துளைக்­காத கண்­ணா­டி­யா­லான இந்த விலை­யு­யர்ந்த அரி­யா­ச­னத்தை உரு­வாக்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் அருங்­காட்சிய­ கத்துக்கு விஜயம் செய்யும் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு இந்த அரியாசனத்தில் அமரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றமை குறிப் பிடத்தக்கது.