சீனா­வி­லுள்ள மக்கள் தமது புதிய கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளுக்­கான தொடர்­பாடல் சேவையைப் பெறு­வ­தற்­கான பதிவை மேற்­கொள்ளும் போது தமது முகத்தை  ஊடு­காட்டும் பரி­சோ­த­னைக்கு  (ஸ்கானிங்) உட்­ப­டுத்து­வ­தற்கு  நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் நிர்ப்­பந்­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

அந்­நாட்­டி­லுள்ள நூற்­றுக்­க­ணக்­கான இணை­யத்­தள பாவ­னை­யா­ளர்­களின் ஆள­டை­யா­ளத்தை உறு­தி­செய்து கொள்ளும் முக­மாகவே அதி­கா­ரி­களால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நடை­முறை குறித்து கடந்த செப்­டெம்பர் மாதம்  அறி­விக்­கப்­பட்­டது.

இணை­யத்­தள பாவனை குறித்து பிர­ஜை­க­ளுக்­குள்ள நியா­ய­பூர்­வ­மான உரி­மை­க­ளையும் அக்­க­றை­க­ளையும் பாதுகாக்க விரும்­பு­வ­தாக  சீனா தெரி­விக்­கி­றது.

கைய­டக்­கத்­தொ­லை­பேசி சேவை­களைப் பெற பதிவு செய்­ப­வர்­களால் வழங்­கப்­படும் அ­டை­யாள  அட்­டைகள் அச­லா­னதா என்­பதை உறு­திப்­ப­டுத்தும் முக­மா­கவே மேற்­படி முகத்தை ஊடு­காட்டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தும் செயற்­கி­ரமம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

சீனா ஏற்கனவே தனது பிரஜைகளின் முகத்தை அடையாளம் காண்பதற்கான சர்ச்சைக்குரிய  தொழில்நுட்பத்தை நடை முறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.