நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் அம்பியூலன்ஸுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் அம்பியூலன்ஸ் சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹரிபூர் பகுதியில் இந்த விபத்து நேற்று பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த ஒருவரது உடலை நேபாளத்தில் உதயப்பூர் மாவட்டம் கெய்காட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த  விபத்தில் இறந்தவரின் இரு புதல்வர்களும், மூன்று உறவினர்களும் அடங்குகின்றன்றனர்.

இந்த சம்பவத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்