உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தையும் இலங்கை 42 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 18 மில்லியன் பேரும் இலங்கையில் 45 ஆயிரத்து 900 பேரும் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். இந்த தகவல்கள்  2016 உலக அடிமைத்தன அட்டவணையில் வெளியாகியுள்ளதோடு இந்த ஆய்வு அறிக்கையை  வோல்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

கொத்தடிமைகள் அல்லது நவீன அடிமைகள் தொடர்பான விடயத்தில் அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாக 167 நாடுகளில் 42 ஆயிரம் பேரிடம் 50 மொழிகள் மூலம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த தகவல்கள் மற்றும் ஆராய்ச்சி முறைகள் திருத்தம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அடிமைகள் 28 சதவீதம் அதிகமாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் 4.5 கோடிக்கு அதிகமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நவீன அடிமைகளாக சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 3இல் 2 பங்கு  ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் மிக அதிகமாக  1.8 கோடி பேர் அடிமைகாளாக சிக்கியுள்ளனர். இது இந்தியாவின் முழு சனத்தொகையில் 1.4 சதவீதமாகும்.

முதல் இடத்தில் வடகொரியா அதிகம் என்றாலும் அதன் மக்கள் தொகையில் 4.37 சதவீதம் தான் உள்ளது.

அரசாங்கத்தின் பதில் மிக பலவீனமாக உள்ளது. இந்த நவீன அடிமைத்தனம்  அச்சுறுத்தல்கள், வன்முறை, மிரட்டல், மோசடி துஷ்பிரயோம் என தனி நபரை சுரண்டுகிறது.

இந்த பட்டியலில் வடகொரியா முதலிடத்தையும் முறையே உஷ்பெக்கிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. 

இந்த அறிக்கையின்படி உலக நாடுகள் முழுவதும் 45.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

உலக நாடுகளின் கொத்தடிமைகளின் எண்ணிக்கையில் இந்திய கொத்தடிமைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 51 சதவீதமானோர் இந்தியாவில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா உள்ளது 30.3 இலட்சம், பாகிஸ்தான் 21.3 இலட்சம், பங்களாதேஷ் 15.3 இலட்சம் உஷ்பெகிஸ்தான் 12.3 லட்சம் பேர் அடிமைகளாக சிக்கி உள்ளனர். 

மக்கள் தொகை அடிப்படையில் உஸ்பெகிஸ்தான் 3.97 சதவீதமும் கம்போடியா 1.65 சதவீதமாகும். இந்த  ஆய்வில் இருந்து  வட கொரியாவில்  மட்டுமே இந்த  நவீன அடிமை எந்த வடிவிலும் இல்லை.