சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி தியத்தலாவை, அப்புத்தளை, பண்டாரவளை, ருவான்வெல்ல, பலாங்கொடை மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு மின் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

மின்சாரக் கம்பிகளில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்ற வருவதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் தொடரும் சீரற்றக் காலநிலைக் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாவனையார்கள் மின்சார துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.