இணைய உற்பத்தி விளக்கங்கள் வாழ்விற்கு சௌகரியம் தரும் சிங்கர் “Show Me How”

Published By: Priyatharshan

31 May, 2016 | 04:44 PM
image

நீடித்து உழைக்கும் நுகர்வோர் உற்பத்திகளை விற்பனை செய்வதில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி, வீட்டு இலத்திரனியல் சாதனங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்துவது என்பது தொடர்பான பயனுள்ள தகவல்களை சிங்கர் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி அவர்களுக்கு உதவும் முகமாக “Show Me How” என்ற ஒரு பிரத்தியேகமான YouTube ஊடகம் மற்றும் ஸ்மார்ட்போன் app  ஆகியவற்றை ஆரம்பித்துள்ளது. 

தெற்காசிய பிராந்தியத்தில் இத்தகைய தீர்வு நுகர்வோருக்கு முதன்முறையாக கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தளம் மூலமாக பல்வேறு உற்பத்திகள் தொடர்பான விளக்கங்களுடன் சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு முன்னெடுப்பான “Singer - Show Me How” ஆனது நுகர்வோர் தமது வீட்டு இலத்திரனியல் சாதனங்களை சரியான வழியில் உள்ளிணைப்பு செய்துகொள்ளவும், நேரத்தையும்,  பணத்தையும் மீதப்படுத்தும் வகையில் அவற்றை எவ்வாறு திறன்மிக்க வழியில் உபயோகிப்பது என்பது தொடர்பாகவும் வழிகாட்டல் தகவல்களை வழங்குகின்றது. 

இங்குள்ள வீடியோக்கள் முறையற்ற பாவனையால் அவற்றிற்கு ஏற்படக்கூடிய சேதங்களிலிருந்து அவற்றைப் பாதுகாத்து, அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றது. 

தையல் இயந்திரங்கள், சலவை இயந்திரங்கள், மைக்ரோவேவ் அடுப்புக்கள், மல்டி குக்கர்கள் மற்றும் கிரைன்டர்கள் போன்ற சிங்கர் வீட்டு உபயோக சாதனங்களுக்கு தற்போது இந்த தனித்துவமான வீடியோக்கள் கிடைக்கப்பெறுகின்றன. இத்தகைய உற்பத்திகள் அனைத்திலும் “Singer - Show Me How” என்ற ஸ்டிக்கர் பொறிக்கப்பட்டுள்ளதுடன் அது வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தி தொடர்பான விளக்கத்தை அளிப்பதுடன் வீடியோ வடிவ விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் இரு வழிகளை பின்பற்ற முடியும். 

ஸ்மார்ட்போனிலுள்ள barcode அல்லது QR code scanner app இனை உபயோகித்து நேரடியாகவே YouTube ஊடகத்தில் வீடியோக்களைப் பார்ப்பது முதலாவது தெரிவு. உங்களது தொலைபேசியில் “Show Me How” Android app இனை பதிப்பிறக்கம் செய்து இந்த app இன் ஊடாக வீடியோ வடிவ விளக்கங்களைப் பார்ப்பது இரண்டாவது தெரிவு.

இத்தீர்வு தொடர்பாக சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“எழுத்து வடிவிலான பாவனையாளர் விளக்க கையேடுகளை விடவும் வீடியோ மூலமாக அவற்றை பார்த்து, இலகுவில் பரீட்சயப்படுத்திக்கொள்வது பொதுவான மனித சுபாவமாகும். எமது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்கள், tab சாதனங்கள் மற்றும் PC கணினிகள் மூலமாக இணைய வசதிகளைக் கொண்டுள்ளதுடன், அவர்கள் உற்பத்திகளை எவ்வாறு முறையாக உள்ளிணைப்புச் செய்து, சரியான வழிமுறையில் பாவனை செய்வது என்பது தொடர்பாக அவர்களுக்கு காண்பிப்பதற்கு இதுவே சிறந்த வழிமுறை என நாம் உணர்ந்துகொண்டோம்.

எந்நேரத்திலும், எங்கிருந்தும் வீடியோக்களை பார்க்கும் வசதியானது அவர்களுக்கு வாழ்வில் இன்னும் அதிகமான சௌகரியத்தை வழங்கும்.”

நிறுவனத்தின் இந்த சமீபத்தைய புத்தாக்கத்திற்குப் பின்னாலுள்ள எண்ணப்பாடு தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத் துறைப் பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன, விளக்கமளிக்கையில்,

“பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுடன் புத்தாக்கமான வழிமுறைகளின் மூலமாக இணைப்பை ஏற்படுத்தும் வழிமுறைகளை சிங்கர் எப்போதுமே நாடி வந்துள்ளது. புதுமையான அம்சங்களை அடைந்துகொள்வதில் தொழில்நுட்பம் பிரதான பங்கு வகிக்கின்றது என நாம் உறுதியாக நம்புவதுடன், வாடிக்கையாளர்களின் விரல் நுனிகளில் இத்தகைய தனித்துவமான உற்பத்தி தொடர்பான வீடியோ வடிவ விளக்கமானது அவர்களுடைய அன்றாட வாழ்வில் சௌகரியத்தை சேர்ப்பிக்கும்”.

நாடெங்கிலும் பரந்துள்ள 400 இற்கும் மேற்பட்ட விற்பனைக் காட்சியறைகள் மற்றும் அதற்கு ஈடாக வியாபித்துள்ள விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் மூலமாக சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் தருகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கி வருகின்றது. பல இலட்சக்கணக்கான இலங்கை மக்களின் அன்றாட வாழ்வை எட்டி, கல்வி, விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பல்வேறு ஏனைய சமூக ஆதார செயற்பாடுகளில் முன்னிலை வகித்துவருகின்ற ஒரு வர்த்தகநிறுவனமாக சிங்கர் திகழ்ந்து வருகின்றது. 

இத்தகைய முயற்சிகளுக்காக நிறுவனத்திற்கு எண்ணற்ற விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் தொடர்ந்து பத்து வருடங்களாக முதல் ஸ்தானத்திலுள்ள நாட்டில் மக்களின் பெரு விருப்பிற்குரிய வர்த்தக நாமமாக சிங்கர் திகழ்ந்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31