ஒருவருக்கு ஆஸ்மா உள்ளதா? இல்லையா? என்பதையும், அவர் எம்மாதிரியான ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையினால் அவர் பலனடைந்து வருகிறாரா? இல்லையா? என்பதையும் குறித்து அறிந்து கொள்ள FeNO என்ற புதிய கருவி கண்டறியப்பட்டிருக்கிறது.

Fractional Exhaled Nitric Oxide எனப்படும் இந்த கருவியினை உபயோகப்படுத்தினால் ஆஸ்மாவின் அளவு குறித்தும், ஆஸ்மா இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும்  காண்பிக்கும். அத்துடன் ஆஸ்மா பாதிப்பு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையினால் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது வேறு உடலுறுப்புகளின் பாதிப்பால் ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரியப்படுத்தும்.

ஆஸ்மாவிற்கு சிகிச்சையெடுப்பவர்கள், தங்களது சிகிச்சை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறதா? என்பதையும் அவதானிக்க இந்த கருவி உதவும்.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு ஆஸ்மாவின் பாதிப்பு குறைந்திருக்கிறதா? இல்லையா? என்பதைக் காணவும் இந்த கருவி உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகள் தங்களின் ஆஸ்மா பாதிப்பு குணமடைந்து வருவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.