ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

30 Nov, 2019 | 10:54 AM
image

ஏமனின் சாடா மாகாணத்தின் மனப்ஹி மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015  ஆண்டு முதல் கடும்  சண்டை நடந்து வருகிறது.

அத்தோடு உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரித்து வருகிறது.

அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சவுதி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஏமனின் சாடா மாகாணத்தின் மனப்ஹி மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் நிலநடுக்கம்

2026-05-20 13:41:28
news-image

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக ஜோன் ஸ்வினி...

2026-05-20 12:14:57
news-image

மேற்காசியா நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி...

2026-05-20 12:02:45
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா...

2026-05-20 06:26:19
news-image

கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்...

2026-05-19 12:52:50
news-image

துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் வெறித்தனம்:...

2026-05-19 11:45:22
news-image

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு ;...

2026-05-19 10:00:22
news-image

ஈரான் எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்க...

2026-05-19 04:54:41
news-image

உலக சாதனை முறியடிப்பு: 32ஆவது முறையாக...

2026-05-18 13:15:03
news-image

அமெரிக்காவில் வான் சாகசத்தின்போது 2 போர்...

2026-05-18 11:05:27
news-image

ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலையம்...

2026-05-18 06:37:41
news-image

சீனாவுக்கு செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 

2026-05-17 13:13:24