நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று இணைந்து கொண்டார். 

நடிகர் ராதாரவி தொடக்கத்தில் தி.மு.க.வில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்து, சைதாப்பேட்டை தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரனார்.  அதன் பிறகு மீண்டும் அ.தி.மு.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால், தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்டார் ராதாரவி. 

இந்நிலையில் ராதாரவி இன்று தம்மை பா.ஜ.க.வின் இணைத்துக் கொண்டிருக்கிறார். தனியார் நிகழ்வு ஒன்றிற்காக சென்னை சென்ற பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே. பி. நட்டா முன்பு அக்கட்சியில் ராதாரவி இணைந்தார்.