கொழும்பு நகரில் வாழ்ந்த அப்பாவி மக்கள் கடந்த ஆட்சியின் போது  விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட அனைவருக்கும்  வீடுகளை பெற்றுகொடுப்போம். அத்துடன் தற்போதைக்கு குடிசைகளில் வாழ்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரத்தை போன்று பெறுமதிமிக்க பதிவு சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் வீடில்லா பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் வீடமைப்புடன் தொடர்புடைய அமைச்சர்களை விரைவில் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். இதன்பின்னர் புதிய வீடமைப்பு திட்டமொன்றை வகுப்போம். மேலும் தற்போதுள்ள பழைய கட்டடங்கள் மற்றும் வீடுகளை உடைத்து நவீன மயப்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பு ரோயல் கல்லூரியின் நீச்சல் வீரா் நினைவிழந்து பாதிக்கப்பட்டுள்ள சசங்க அல்விஸ் என்ற மாணவனின் குடும்பத்தினருக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு இலவசமாக வீடு நிர்மாணத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)