இலங்கை போக்குவரத்து சபைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரிப்பாகங்களுக்காக 12 கோடி ரூபாவை, இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயன்றார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

மேலும், அவரது பதவிக்காலத்தில் சொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினரால் அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.