பெண் வைத்தியர் எரித்து கொலை : குடும்பத்தினர் அதிர்ச்சியல் - இந்தியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

29 Nov, 2019 | 04:09 PM
image

ஐதராபாத் புறநகர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவரை கொலை செய்து எரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய வைத்தியர் பிரியங்கா ரெட்டி  கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை வைத்தியாசலையில் வைத்தியராக பணியாற்றி வந்தார். 

நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் உடனடியாக ஒரு வைத்தியர் ஒருவரை சந்திக்க தனது ஸ்கூடரில்  சென்றுள்ளார்.

 இந்நிலையில் அவரது ஸ்கூடர் வாகனம் இடையில் பஞ்சராகியுள்ளதை அடுத்து அருகில் சென்ற கொண்டிருந்து லொறியின் சாரதி ஒருவர் அவரது ஸ்கூடர் வண்டியை பஞ்சர் பார்க்க உதவி செய்ததை அடுத்து , அந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தகவலை தெரவித்தார்.

இரவு 9 மணிக்கு தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா ஸ்கூடர் பழுது பார்க்கப்ட்டது தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன். 

எனக்கு பதற்றமாக இருக்கிறது நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு எனக் கூறியுள்ளார். 

சிறிது நேரத்தில் அவரது தொலைபேசி துண்டிப்பபை இழந்தது ,  நீண்டநேரமாகியும் தொலைப்பேசி இயங்கவில்லை.

இதனால் குடும்பத்தினர் அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் அப்போது பிரியங்கா அங்கு இருக்கவில்லை இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் பொலிஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத் - பெங்களூரு தேசிய வீதிக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் வந்தது. 

பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பின்னர் அது பிரியங்கா எனத் தெரியவந்தது. 

அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 

டோல்கேட் அருகே  உள்ள ஒரு கட்டிடத்தை பொலிஸார் சோதனை செய்தபோது,  உள்ளாடைகள் , பணப்பை  மற்றும் ஒரு மது போத்தல் கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். 

எனவே பிரியங்கா கொலை செய்யப்படுவதற்கு முன் அந்த கட்டிடத்தில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இக் கொலை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,லொறி சாரதி உட்பட இருவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு பிரியங்க டோல்கேட் அருகே உள்ள சிசிரிவி காட்களில் அவர் சென்றதையும் பொலிஸ் சோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47