ஏடி.எம். நிலையத்தில் ஏசி குளுமையில் ஓய்வெடுத்த மலைப் பாம்பு ஒன்று, பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளரைப் பார்த்து சீறிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஏடி.எம். இயந்திரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது, ஏடி.எம். இயந்திரத்தின் மீது படுத்திருந்த மலைப் பாம்பு ஒன்று அவரைப் பார்த்து வாயை பிளந்தபடி சீறியது. இதனால் அரண்டுபோன அவர், அலறியடித்து வெளியே  ஓடினார்.

ஏடி.எம். இயந்திரத்தில் மலைப் பாம்பு இருக்கும் தகவல் கேள்விப்பட்ட மக்கள் பாம்பை பார்க்க அங்கு குவிந்தபோது, பாம்பு மேலும் சீற்றமடைந்தது. 

இது குறித்து, சம்பந்தப்பட்ட ஏடி.எம். மின் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், பாம்பு பிடிப்பவரின் உதவியுடன் அந்த பாம்பைப் பிடித்து, பத்திரமாக கொண்டுசென்று வனப்பகுதியில் விட்டமை குறிப்பிடத்தக்கது.