பாகிஸ்தானுடான டெஸ்ட் போட்டியில் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறியதன் காரணமாக அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 கிலோ மீற்றர் தூரம் ஓடி, தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது பந்துவீச்சில் 7 முறை ஆட்டமிழந்ததைக் குறிப்பிடும் விதமாக யாசிர் ஷா, கைவிரல்களை காட்டினார். 

இந்தப் போட்டி முடிந்ததும் பிரிஸ்பேன், கப்பா மைதானத்தில் இருந்து 3 கிலோ மீற்றர் தூரம் ஓடியே, தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றார் ஸ்மித்.

இது குறித்து தகவல் தெரிவித்த ஸ்மித், 

தான் அதிக ஓட்டம் எடுக்கவில்லை என்றால் எனக்கு நானே எப்போதும் கொடுத்துக் கொள்ளும் தண்டனை இது. நான் சதமடித்தால், அன்று இரவு சாக்கலேட் பாருக்கு சென்று கொண்டாடுவேன். 

அதிக ஓட்டம் அடிக்கவில்லை என்றால், ஜிம்முக்குச் சென்று அதிகமாக உடற்பயிற்சி செய்வேன் அல்லது சில கிலோ மீற்றர் தூரம் ஓடி, எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.