Published by R. Kalaichelvan on 2019-11-29 11:26:33
வடகொரியாவானது இரு இனங்கண்டறியப்படாத ஏவுகணைகளை நேற்று வியாழக்கிழமை ஏவிப் பரிசோதித்ததாக தென்கொரியா தெரிவிக்கிறது.

தென் ஹம்கையொங் பிராந்தியத்திலிருந்து கிழக்கு நோக்கி ஏவப்பட்ட மேற்படி ஏவுகணைகள் ஜப்பானிய கடலில் விழுந்ததாக தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4.59 மணிக்கு அந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் இடம்பெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையிலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.