"ஹொங்­கொங்கில் சீனாவின் வானம் தலை­கீ­ழாக மாறி­யது" என வர்­ணிக்கும் அள­விற்கு அதன் தேர்தல் முடி­வுகள் சீனாவை அச்­சு­றுத்­தி­யுள்ளன. ஹொங்­கொங்கில் நடை­பெற்று முடிந்­துள்ள  மாவட்ட சபை தேர்­தல்­களில் ஜன­நா­யக ஆத­ரவு இயக்கம் எதிர்­பா­ராத பாரிய வெற்­றியை பெற்­றுக்­கொண்­டது.

இந்தத் தேர்­தலில் ஜன­நா­யக ஆத­ரவு இயக்­கத்தின் வேட்­பா­ளர்கள்  மொத்­த­மாக 347 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளனர். சீன சார்பு கட்­சியின் வேட்­பா­ளர்கள் வெறு­மனே 60 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளனர். சுயா­தீ­னக்­குழு 45 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. இந்த தேர்­தலில் சீன  சார்பு தரப்பின் முக்­கிய வேட்­பா­ளர்கள் படு­தோல்­வியைத் தழுவியுள்­ளனர்.

இதில் சீன சார்பு கட்­சியின் படு­தோல்­வி­யா­னது வெறு­மனே மூன்­றே­வார காலத்தில் நிர்­ண­யிக்­கப்­பட்­டது எனலாம். காரணம் என்­ன­வெனில், தேர்தல் இடம்­பெற முன்னர்  சுமார் மூன்று வார­கா­ல­மா­கவே ஹொங்­கொங்கில் ஜன­நா­ய­கத்தை அடக்கும் வகையில் இடம்­பெற்ற வன்­மு­றைகள், மக்­களின் ஜன­நா­யக தாகத்­துக்­கான போராட்டம், முக­மூடி ஆர்ப்­பாட்­டங்கள் என, நடை­முறை சீன சார்பு அர­சாங்­கத்தை ஆட்டுவித்துக்­கொண்டே இருந்­தது.

இதில் சீன சார்பு கட்­சியின் நகர்வு முற்று முழு­தாக  ஹொங்கொங்  காவல்­து­றை­யி­ன­ருக்கு ஆத­ர­வாக தொடர்ச்­சி­யாக குரல் கொடுத்­த­தா­கவும், ஜன­நா­யகம் கோரி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­ப­வர்­களை தாக்­கிய கும்­பல்­க­ளுடன் தொடர்பை பேணி வந்­ததாகவும் இருந்தது என சர்­வ­தேச ஊட­கங்கள் வர்­ணிக்­கின்­றன.

அப்­படி  ஹொங்கொங் மக்­களின் ஜன­நா­யக வெறிப்போராட்டம் தான் என்ன? யாருக்கு எதி­ரானது இந்தப் போராட்டம்? இத்தகைய கேள்­விகளுக்­கெல்லாம் ஒரே பதில் சீனா தான்.

 ஹொங்கொங் ஆரம்­பத்தில் இருந்தே பிரிட்டிஷ் முடிக்­கு­ரிய குடி­யேற்ற நாடு­களில் ஒன்­றாக இருந்தது. எனினும்  1997ஆம் ஆண்டு பிரிட்டன், ஹொங்­கொங்கை சீனா­விடம் கைய­ளித்து ஒதுங்­கிக்­கொண்­டது. அதா­வது ஹொங்கொங் விடு­தலை பெறு­கின்­றது என கூறாமல் மீண்டும் ஒரு அசு­ரப்­பி­டிக்குள் சிக்­க­வைத்து விட்­டது எனலாம். அன்றிலிருந்து இன்று வரை­யிலும் ஹொங்கொங்  சீன மக்கள் குடி­ய­ரசின் சிறப்பு நிர்­வாக பகு­தி­களில் இரண்டில் ஒன்­றா­னது. மற்­றொன்று மக்காவ்.

இருப்­பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்­கைகள் எனும் அடிப்­ப­டையில் தொடர்ந்தும் பிரிட்டிஷ் சட்டதிட்­டங்­க­ளுடன், தமக்­கென தனித்­து­வ­மான தன்­னாட்சி அதி­கா­ரங்­களைக் கொண்­டுள்­ளது. அதா­வது ஹொங்கொங் தனித்­து­வ­மான நாணயம், சட்டதிட்­டங்கள், அர­சியல் முறைமை, குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்டு விதி­மு­றைகள், காவல் துறை, அபி­விருத்தித் திட்­டங்கள் போன்­றவை முற்­றிலும் வேறா­னதும் தனித்­து­வ­மா­னதும் கொள்­கை­களைக் கொண்­டுள்­ளதுமாகவே இருந்தது.

எனினும் ஹொங்கொங் மக்கள் தம்மை தனித்த இறை­யாண்மை மக்­க­ளாக கருதி வரு­கின்ற போதிலும் சீனா அதனை விடு­வ­தாக இல்லை. பரந்த சீனாவின் ஒரு பகு­தியே ஹொங்கொங் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே சீனா பார்க்­கின்­றது.  இந்­நி­லை­யில்தான் சில கால­மா­கவே சீனாவின் இரும்­புப்­பிடி ஹொங்­கொங்­கையும் அதன் மக்­க­ளையும் அதி­க­மாக வாட்டத் தொடங்­கி­யது.  இதன் தாக்கம் படிப்­ப­டி­யாக மக்­களால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இது ஹொங்­கொங்கில் நீண்­ட­கா­ல­மான ஒரு போராட்­டத்தை முன்­னெ­டுக்க ஏது­வாக  அமைந்­தது. இன்­னொரு நாடு தமது நாட்­டைச் சுவி­க­ரிக்கப் போவ­தா­கவே இந்த போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அண்மைக்கால­மாக சுமார் 16 வாரங்­களை கடந்து ஹொங்கொங்  மக்கள் தொடர்ச்­சி­யாக வீதியில் இறங்கி போராட ஆரம்­பித்­தனர். இவை அனைத்­துக்கும் பிர­தா­ன­மாக அவர்கள் கையில் எடுத்­துக்­கொண்ட விடயம் கைதிகள் பரி­மாற்ற சட்­டமே.

ஹொங்கொங் ஏற்­க­னவே 20 நாடு­க­ளுடன் கைதிகள் பரி­மாற்ற சட்­டத்தின் கீழ் கைதி­களை பரி­மாற்ற இணக்கம் தெரி­வித்­துள்ள போதிலும் கூட, சீனா­வுடன் இந்த கைதிகள் பரி­மாற்று ஒப்­பந்­தத்தை செய்து கொள்­ள­வில்லை. 20 ஆண்­டு­க­ளாக இந்த நிலைமை இருந்­தாலும் தற்­போது இந்த சட்­டத்தில் ஏற்­பட்ட தளர்வு தன்­மையே ஹொங்கொங் அர­சாங்­கத்­துடன் அந்­நாட்டு மக்கள் முட்டிமோத  கார­ணி­யாக அமைந்­தது­.

அதா­வது ஹொங்­கொங்கில் குற்றச்  செயல்­களில் ஈடு­படும் நபர்­களை சீனா­வுக்கு நாடு கடத்தி அங்கு வைத்து சட்ட விசா­ர­ணை­களைச் செய்யும் வகை­யி­லான சட்­டத்தை கொண்­டு­வர சீன சார்பு ஹொங்கொங் அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்த போராட்டம் வெடித்­துள்­ளது.  சீனா தனது நிர்­வாக இறை­மைக்குள் செய்­துள்ள தலை­யீடு இன்னும் சிறிது காலத்தில் தமது அர­சியல் இறை­மைக்குள் தலை­யிட ஆரம்­பித்து தமது இறை­மையை பறித்­து­விடும் என்­பதே ஹொங்கொங் மக்­களின் கோஷ­மாக எழுந்­துள்­ளது.

அதேபோல் சீனாவின் பலத்த கட்­ட­மைப்பின் ஹொங்கொங் நிர்­வாகம் தள்­ளப்­படும், இதனால் ஹொங்கொங் நீதித்­ து­றையின் சுதந்­திரம் முற்­றாக அழிந்­து­விடும் என்­பதே அவர்­களின் அச்­ச­ம். இது நியா­ய­மாக அச்­சப்­பட வேண்­டிய கார­ணியும் கூட. ஏனெனில் சீனா ஹொங்கொங்கில் கால்­ப­தித்­துள்ள அளவைப் பார்த்தால் அவர்­களின் ஆதிக்கம் இல்­லாத இடமே இல்லை. சகல பகு­தி­க­ளிலும் சீனாவின் வர்த்­தக கட்­ட­மைப்­புகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்ளன.

விமா­ன­ நி­லை­யங்கள், துறை­மு­கங்கள் மட்டுமல்­லாது சீனா ஹொங்­கொங்கை இணைக்கும்  மேம்­பா­லங்­களின் ஆதிக்கம் வெறு­மனே அபி­வி­ருத்தி மட்­டு­மல்ல சீனாவின் ஆதிக்க தன்­மையும் கூட. அதனை ஹொங்கொங் மக்கள் உணர்ந்து விட்­டனர். ஹொங்­கொங்கில் சீனா செய்­துள்ள முத­லீ­டு­களின் தாக்கம் ஹொங்­கொங்­கினால் மீட்சி பெற முடி­யாதது.  

ஹொங்­கொங்கில் மட்­டு­மல்ல தென்­சீனக் கடல் பரப்பில் உள்ள சொலமன் தீவுகள், பேர்செல் தீவுகள், வனு­வாடு தீவுகள், புஜி தீவுகள், பபுவாநியூ­கி­னியா, போகன்வெல் தீவு உள்­ளிட்ட சில முக்­கிய தீவு­களின் நிர்­வாக அதி­காரம் சீனா­வி­டமே இருக்கின்றது. அதா­வது இந்த தீவு­களின் துறை­முக நிர்­வாகம், சுற்­றுலா ஆதிக்க நிர்வாகம், மீன்­பிடி கப்­பல்துறை நிர்­வாக அதி­காரம் முழு­மை­யாக சீனா­வி­டமே உள்­ளது.

கடல்­மார்க்க வர்த்­தக நகர்­வு­களில் சீனாவின் "நீலப் பொரு­ளா­தார கட்­ட­மைப்பு" விரி­வ­டைந்­து­ செல்­வது இதனைத் தெளி­வாகக் காட்­டு­கின்­றது. குறிப்­பாக தீவு நாடு­களை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்டு அதில் தமது ஆதிக்­கத்தை செலுத்தும் சூட்­சும நகர்­வு­களை சீனா மிகவும் ஆழ­மா­கவும் அவ­தா­ன­மா­கவும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இந்த ஆதிக்க பொறி வலையில் சீனாவின் மிகப்­பெ­ரிய இலக்­காக சிக்கும் நாடு  இலங்­கையே.  சர்­வ­தேச ஊட­கங்கள் இப்­போதே அதனை வர்­ணிக்க ஆரம்­பித்­து­விட்­டன. இலங்­கையின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை எடுத்து நோக்­கினால் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் அனைத்­துமே சீனாவின் வசமே உள்­ளன.

தெற்கில் ஹம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்தி சீனாவின் மிகப்­பெ­ரிய அபி­வி­ருத்தி திட்­ட­ம். இதற்­காக  1.12 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை முத­லீ­டாகச் செலுத்தி இன்று 99 ஆண்­டு­க­ளுக்­காக  துறை­மு­கத்தை குத்­த­கைக்கு எடுத்து  சீனா தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. தலை­ந­கரில் முன்­னெ­டுக்கும் பாரிய வர்த்­தக வேலைத்­திட்­டங்­களில் சீனாவின் ஆதிக்கம்  அதி­க­மா­கவே உள்­ளது. சர்­வ­தேச கடன் வாங்­கலில்   60 வீத­மான கடன் சீனா­விடம் இருந்தே பெற்­று­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அதா­வது கடந்த 2010ஆம் ஆண்டு தொட க்கம் 2015ஆம் ஆண்டு வரையில் இலங்­கையில் அபி­வி­ருத்தி வேலை­த்திட்­டங்­க­ளான மத்­தள விமான நிலையம், ஹம்­பாந்­தோட்டை துறை­முகம், அனல்மின் நிலையம், தொடர்­பாடல் திட்­டக்­கோ­புரம் மற்றும் நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்­திக்­காக மாத்­திரம் 5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை சீனா இலங்­கைக்கு வாரி இறைத்­துள்­ளது. இப்­போது வரையில் சீனா­வினால் 8 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான கடன் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கடன்கள் உள்­ள­டங்­க­லாக ஜப் பான், உலக வங்கி, இந்­தியா, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி என அனை­வ­ரி­டமும் இலங்கை  இப்போது வரை, வாங்­கி­யுள்ள சர்­வ­தேச கட­னா­னது 55 பில்­லியன் அமெ­ரிக்க டொல ர்­க­ள். 2020ஆம் ஆண்டு முதல் நான்­கு­மாத காலத்­தினில் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­க­ளிடம் இருந்து வாங்­கி­யுள்ள கடன்­களில் 7.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வட்­டி­யாக செலுத்­த­ வேண்­டி­யுள்­ள­தாக மத்­திய வங்கி அறிக்­கை­யொன்று உறு­திப்­ப­டு­தி­யுள்­ளது. இலங்கை ரூபாவில் இது 13.5 பில்­லியன் ரூபாய்­.

அதேபோல் 2019ஆம் ஆண்டு தொடக் கம் 2022ஆம் ஆண்டு வரையில் செலுத்த வேண்­டிய கடன்­தொகை 21 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ள்.

இதில் 14 வீத­மான கடன் சீனா­விற்கே கொடுக்க வேண்­டி­யுள்­ளது. வாங்­கிய கடன்­களை திரும்ப கொடுக்­கக்­கூ­டிய அளவில் இலங்கை கடந்த 10 ஆண்­டு­களில் வரு­மா­னத்தை பெற்­றுள்­ளதா அல்­லது அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளை­யா­வது செய்­துள்­ளதா என்றால் அதில் பாரிய சந்­தேகம் எழுந்­துள் ளது.

அபி­வி­ருத்தி என பாரிய அளவில் நிதி யைக் கொட்டி செய்­துள்ள அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களில் பல இன்­னமும் வரு­மா­னத்தை ஈட்டும் வேலைத்­திட்­டங்­க­ளாக இல்லை என்றே வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. சில பாரிய வேலைத்­திட்­டங்கள் திறப்­பு­விழா கண்­டுள்ள போதிலும் கூட அவற்றை முழு­மைப்­ப­டுத்த இன்­னமும் பல கோடி ரூபாய்கள் தேவைப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் கடன்­களை திருப்­பிக்­கொ­டுப்­பதில் இலங்கை பாரிய நெருக்­கடி நிலை­களை சந்­திக்கும் என கரு­தப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் ஹொங்கொங் மீதான சீனாவின் பாய்ச்சல் இன்று எவ்­வாறு உள்­ளதோ அதே அளவில் அல்­லது அதற்கும் மேலா­ன­பாய்ச்­சலை சீனா இலங்கை மீது செலுத்தும் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை.

ஏனெனில் இலங்­கையில் சீனா முன்­னெ­டுத்­துள்ள வேலைத்­திட்­டங்கள் அனைத்­துமே கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு ­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாகும். துறை­மு­கங்கள், விமான நிலை­யங்கள், தலை­நகர் மற்றும் சுற்­றுலா பிர­தே­சங்­களில் அண்­டிய பகு­தி­களில் சீனாவின் கால்த்­தடம் பதிக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு கட்­டத்­துக்கு மேல் இலங்கை அரசாங்கம் வாங்கிய கடன்களை செலுத்த திணறும் நிலையில் அவற்றின் மீதான முழுமையான ஆதிக்கத்தை சீனா செலுத்தும்.

ஆகவே இந்த இரும்புப்பிடியில் இருந்து இலங்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அந்நிய நேரடி முத லீட்டை ஈர்ப்பதற்கும், சில மானியங்க ளைப் பெறுவதற்கும், ஏற்றும தியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் மிகக் குறு கிய காலத்தில் ஒரு திட்டத்தை வகுக்க வேண் டும். இந்த திட்டம் திடமான நிலைத்துக் கொண்டுசெல்லக்கூடிய வகையிலும் அமைய வேண்டும்.

இல்லையேல் இலங் கையின் நிர்வாக அதிகாரங்களில் சீனாவின் தலையீடுகள் ஏற்படும் நிலையில் இலங்கையிலும் மக்கள் போராட்டங்களை முன்னெ டுக்க நேரும்.

துரதிஷ்டவசமாக, இப்போதும் இலங்கை குதிரைக்கு முன்னால் வண்டிலை கட்டிய தைப் போலவே செயற்படுவதாக வர்ணிக் கப்­படுகின்றது. சீனாவிடம் அளவுக்க திகமாக வாங்கிய கடன்களை மறந்து மேலும்மேலும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் கொள்கை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளமை அச்சு றுத்தலானது என்பதில் எதுவித சந்தேக முமில்லை.

- ஆர். யசி