இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் இறக்குமதி வரியை நிதியமைச்சு அண்மையில் மீளாய்வு செய்ததையடுத்து, இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக கார்களின் விலை குறைவடையும் வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானிய அறிவித்தலின் பிரகாரம் 800 சிசி மற்றும் 1,000 சிசி இயந்திர கொள்ளளவைக் கொண்ட வாகனங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் ரகத்தை சேர்ந்த வாகனங்களின் சந்தை விலையில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனேகமான கார்கள் 800சிசி மற்றும் 1,000சிசி இயந்திர கொள்ளளவைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் மாருதி வேகன்-ஆர் போன்ற கார்களின் இறக்குமதி வரி 1.5 - 1.6 மில்லியன் ரூபாவில் இருந்து 1.35 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி வரி பாரிய அளவு அதிகரித்துள்ளமையினால் முச்சக்கர வண்டிகளின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM