இராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Published By: Daya

29 Nov, 2019 | 10:54 AM
image

இலங்­கை­யி­லுள்ள  சுவிற்சர்லாந்து தூத­ர­கத்தில் பணி­யாற்றும்  உள்ளூர் ஊழியர் ஒருவர் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மா­னது இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.  இந்­த­வி­டயம் தொடர்பில்  உரிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று சுவிற்சர்லாந்து வெளி­வி­வ­கார அமைச்சு  கோரி­யுள்­ளது.

இந்த சம்­பவம் குறித்து  கருத்து தெரி­வித்­துள்ள  சுவிற்சர்லாந்து வெளி­வி­வ­கார அமைச்சின் செய்தி தொடர்­பாடல் பியர் அலைன் எல்ட்­சிங்கர்  சம்­ப­வத்தை சுற்­றி­யுள்ள  சூழ்­நி­லைகள் குறித்து  உட­ன­டி­யாக   முழு­மை­யான விசா­ர­ணையை   நடத்­து­மாறு  சுவிற்சர்லாந்து கோரு­கின்­றது.   தீவி­ர­மான மற்றும் ஏற்­றுக்­கொள்ள  முடி­யாத சம்­ப­வ­மாக  இது திகழ்­கின்­றது என்று   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த திங்­கட்­கி­ழமை சுவிற்சர்லாந்து தூத­ர­கத்தில் பணி­யாற்றும் பெண் ஊழியர்  இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால்   வெள்­ளை­வேனில்  கடத்திச் செல்­லப்­பட்டு  சுமார்   இரண்டு மணி நேரத்­திற்கு  மேல்  விசா­ர­ணைக்கு  உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அவ­ரது   கைய­டக்க தொலை­பேசி­யை  அவர்கள்  பார்­வை­யிட்டு  அச்­சு­றுத்­தி­ய­தா­கவும்   தக­வல்கள்  வெளி­யா­கி­யுள்­ளன.

இந்த  சம்­பவம் குறித்து  உரிய விசா­ரணை  நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று தற்­போது கோரிக்கை   விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.   இச்­சம்­ப­வத்தை அடுத்து   இலங்­கைக்­கான    சுவிற்சர்லாந்து   தூதுவர்   ஹான்ஸ்­பீட்டர் மொக்   வெளி­வி­வ­கார அமைச்சர்   தினேஷ் குண­வர்த்­தன, பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகி­யோ­ரையும்  சந்­தித்து  பேசி­யுள்ளார்.

இந்த சந்­திப்­புக்­களில் பேசப்­பட்ட விடயம்   வெளி­வ­ரா­த­போ­திலும்  தூத­ரக பெண் ஊழியர்  கடத்­தப்­பட்டு  அச்­சு­றுத்­தப்­பட்ட சம்­பவம் குறித்து தூதுவர்  சுட்­டிக்­காட்­டி­யி­ருப்பார் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.   திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற சம்­பவம் தொடர்பில் செய்­திகள் கசிந்­தி­ருந்­த­போ­திலும் தூத­ர­க­மா­னது இதனை உட­ன­டி­யாக  உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  நடை­பெற்ற  அமைச்­ச­ரவை   கூட்ட முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில்  அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் பந்­துல குண­வர்த்­த­ன­விடம்  இந்த விடயம் தொடர்பில்  செய்­தி­யா­ளர்கள்  கேள்வி எழுப்­பி­ய­போது  சம்­பவம் தொடர்பில் தாங்கள்  அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் அது தொடர்பில்   தேடிப்­பார்த்து பதி­ல­ளிப்­ப­தாக    கூறி­யி­ருந்தார்.

இந்த விடயம்  தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று  தனது கட­மை­களை பொறுப்­பேற்ற  சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு இரா­ஜாங்க அமைச்சர்  சுசில் பிரே­ம்­ஜ­யந்­த­வி­டமும்  கேள்வி  எழுப்­பப்­பட்­டுள்­ளது.  இதற்கு பதி­ல­ளித்த அவர்  சம்­பவம் தொடர்பில்  தான்  அறி­ய­வில்லை என்றும் அவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்தால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

சுவிஸ்  தூத­ர­கத்தில் பணி­யாற்றும்  பெண் ஊழியர்  கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்ட  சம்­ப­வ­மா­னது  நாட்­டுக்கு பெரும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த விடயம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையும் நேற்று முன்­தினம் செய்தி  வெளி­யிட்­டி­ருந்­தது.  தேர்தல் முடி­வ­டைந்து சில நாட்­க­ளுக்­குள்­ளேயே அர­சியல் ரீதி­யான ஒடுக்கு முறைகள் ஆரம்­ப­மா­கி­விட்­டதோ என்ற அச்சம் அதி­க­ரித்­துள்­ள­தாக  அந்தப் பத்­தி­ரி­கையின் செய்­தியில்   சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்­த ­வாரம்  குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சமூக  கொள்ளை குறித்த  விசா­ரணை அறையின்  பொறுப்­ப­தி­கா­ரியும்   பல  குற்­றச்­செ­யல்­களை துப்­புத்­து­லக்கி  சந்­தேக நபர்­களை கைது­செய்­த­வ­ரு­மான சிறப்பு விசா­ரணை   அதி­காரி  பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா   தனது  குடும்­பத்­தா­ருடன்   அடைக்­க­லம் ­கோரி  சுவிற்சர்லாந்துக்கு சென்­றி­ருந்தார்.  இதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர்  குற்­றப்­பு­ல­னாய்­வுத்­தி­ணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக இருந்த ஷானி அபே­சே­கர  இட­மாற்றம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.  அதனைத் தொடர்ந்தே நிஷாந்த சில்வா  தனது மனைவி மூன்று மகள்­மா­ருடன்  சுவிற்சர்லாந்துக்கு  அடைக்­க­லம்­கோரி   சென்­றி­ருந்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்த  விவ­காரம்  தொடர்­பி­லேயே சுவிற்சர்லாந்து   தூத­ர­கத்தில் பணி­யாற்றும் பெண் ஊழியர்  கடத்­தப்­பட்டு  விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில்  இடம்­பெற்ற  சம்­ப­வங்கள்  தொடர்­பாக   குற்­றப்­பு­ல­னாய்வு  பிரிவின் பணிப்­பாளர்   ஷானி அபே­சே­கர  தலை­மை­யி­லான குழு­வி­னரே  விசா­ர­ணை­களை நடத்தி வந்­தனர்.  லசந்த  விக்­கி­ர­ம­துங்க  படு­கொலை வழக்கு,  பிரகீத் எக்­னெ­லி­ய­கொட காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­பவம்,  ஐந்து மாண­வர்கள் உட்­பட  11 பேர்  கொழும்­பிலும் சுற்­றுப்­புறங்­க­ளிலும் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­பவம்   உட்­பட பல்­வேறு  சம்­ப­வங்கள்  தொடர்பில்  விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்தன.

இந்த நிலை­யி­லேயே  ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் ஷானி  அபே­சே­கர இட­மாற்­றப்­பட்­டி­ருந்தார்.  பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா நாட்­டை­விட்டு வெளி­யே­றி­யதை அடுத்து அது தொடர்­பிலும் விசா­ரணை முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தன.  இதன் தொடர்ச்­சி­யாக  கடந்த  திங்­கட்­கி­ழமை  குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் விசா­ர­ணை­யா­ளர்­க­ளாக சேவை­யாற்றும் 704 பேருக்கு அனு­ம­தி­யின்றி வெளி­நாடு செல்­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அவர்­க­ளது பெயர், விப­ரங்கள்  கட்­டு­நா­யக்க விமான நிலைய குடி­வ­ரவு, குடி­ய­கல்வு  அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டு   அனு­ம­தி­யின்றி   அவர்கள்   வெளி­நாடு செல்­வ­தற்கு  அனு­ம­திக்­கக்­கூ­டாது என்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தூத­ர­கத்தில் பணி­யாற்றும் பெண் ஊழி­யரை  கடத்­திய  இனந்­தெ­ரி­யா­த ­ந­பர்கள் நிஷாந்த டி சில்­வா­வுக்கு விசா வழங்­கப்­பட்­டமை தொடர்­பிலும்   குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவை சேர்ந்த வேறு யாரா­வது அடைக்­கலம் கோரி விசா­வுக்கு விண்­ணப்­பித்­துள்­ள­னரா என்ற  விடயம் தொடர்­பிலும் விசா­ரித்­த­தா­கவும் தற்­போது  செய்­திகள்    வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இதி­லி­ருந்து தூத­ரகப் பெண் ஊழியர்  கடத்­தப்­பட்டு  விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு காரணம்  என்ன என்­பதை  ஓர­ள­விற்கு   ஊகித்­துக்­கொள்ள முடி­கின்­றது.  இந்த விவ­காரம் தொடர்பில்  தற்­போது  குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை   ஆரம்­பித்­துள்­ளது.  சுவிற்சர்லாந்து வெளி­வி­வ­கார அமைச்சின் கோரிக்­கைக்கு அமைய இந்த விடயம் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

வெளி­நாட்டு தூத­ரகம் ஒன்றின் ஊழியர் ஒருவர்   கடத்­தப்­பட்டு அச்­ச­றுத்­தப்­பட்­டமை கண்­டிக்­கத்­தக்க  விட­ய­மாகும்.   இத்­த­கைய செயற்­பாடு  இரா­ஜ­தந்­திர   ரீதி­யான  உற­வு­க­ளைக்­கூட   பாதிக்கும் விட­ய­மாக  மாறக்­கூ­டிய  தன்மை காணப்­ப­டு­கின்­றது. தூத­ர­கத்தின்  உள்­விவ­கா­ரங்­களில்  தலை­யி­டு­வ­தற்கு  யாருக்­குமே  உரிமை இல்லை.  அதுவும்  தூத­ர­கத்தில்  அடைக்­கலம் கோருவோர்  தொடர்பில் தக­வல்­களை  பெறு­வது என்­பது   அடிப்­ப­டையில் மனித  உரிமை மீற­லா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

நாட்டில்  ஒரு­வ­ருக்கு அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­மானால்  அவர் வெளி­நாட்டுத் தூத­ர­கங்­க­ளிடம் தஞ்சம்  கோர­மு­டியும்.  இறுதி யுத்த காலத்­திலும் அதன் பின்­னரும்   சுவிற்சர்லாந்து உட்­பட ஐரோப்­பிய நாடுகள் பல­ருக்கு  இத்­த­கைய அர­சியல் தஞ்சம் வழங்­கி­யி­ருக்­கின்­றன.   தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலர் கூட யுத்­த­கா­லப்­ப­கு­தியில் இவ்­வாறு   அர­சியல் தஞ்சம் கோரி  புலம்­பெ­யர்ந்­தி­ருக்­கின்­றனர்.   எனவே இது அடிப்­படை மனித உரி­மை­யுடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும்.  இந்த விட­யத்தில் தவ­று­காண முயல்­வதை  ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இறுதி யுத்த காலத்தில்  கடத்­தல்கள்,  கைதுகள், காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்கள்  தொடர்­க­தை­யாக இடம்­பெற்று வந்­தன.  அப்­போது மேற்­கொள்­ளப்­பட்ட மனித  உரிமை மீறல்கள் மற்றும்  யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணைகள் நடத்­தப்­பட்டு  பொறுப்­புக்­கூறல் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.  ஐ.நா. மனித உரிமை பேர­வையில் பல்­வேறு தீர்­மா­னங்கள்  நிறை­வேற்­றப்­பட்டு  பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான வலி­யு­றுத்தல் தொடர்ந்து  வருகின்றன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வெளிநாட்டு தூதரக பெண் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு  அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவமானது அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடர்வதை  அரசாங்கம்  அனுமதிக்கக்கூடாது.  புதிய  அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில்   சில தரப்பினர் கூட இத்தகைய செயற்பாடுகளில்  ஈடுபடக்கூடும்.

எனவே  இந்த சம்பவம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு பொலிஸார்   விசேட குழுவை அமைத்து  விசாரணை  நடத்தவேண்டும்.  உண்மை யிலேயே  யார் இத்தகைய செயலில் ஈடுபட்டனர் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.  ஏனெனில்  இந்த சம்பவமானது சர்வதேச ரீதியில்  பெரும்   அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருக்கின்றது.

சர்வதேசத்துடனான  இராஜதந்திர ரீதியிலான  தொடர்புகள்  கட்டிக் காக்கப்படவேண்டும்.  சர்வதேசத்தின் ஒத்துழைப்பு  எமது நாட்டுக்கு  இன்றியமையாததாகும்.  எனவே அத்தகைய  ஒத்துழைப்புக்களை பெறும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள்  அமையவேண்டும்  என்பதை  சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

(29.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21