பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலையிலிருந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நாடுமுழுவதிலும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை கடக்கும்போது வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் கடக்குமாறு எச்சரிக்கை விடுத்தே குறித்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.