வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும்!

Published By: Vishnu

29 Nov, 2019 | 08:48 AM
image

வடக்கிற்கான ரயில்சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று வழமைபோல் வடக்கிற்கான ரயில்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது யாழ்.தேவி புகையிரதத்தின் ஐந்து பெட்டிகள் புகையிரத பாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளன. இதேவேளை புகையிரதத்தின் இயந்திரப் பகுதி புகையிரத கடவையில் இறுகியிருந்தது.

இந்த விபத்தில் பயணிகள் ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை.  அருந்த போதும் குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. அதேவேளை சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

தற்போது தடம்புரண்ட புகையிரத பெட்டகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் தண்டவாளம் சீர்செய்யப்பட்டு, வடக்கிற்கான ரயில்சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில்...

2025-02-07 20:01:30
news-image

தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய...

2025-02-07 20:24:36
news-image

இலங்கையின் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து...

2025-02-07 20:04:51
news-image

மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை

2025-02-07 20:20:14
news-image

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க மின்சார சட்டத்தை...

2025-02-07 20:10:19
news-image

கடிதத்தில் பெயரிடப்பட்டிருப்பவர்கள் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள்...

2025-02-07 20:59:51
news-image

இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும்...

2025-02-07 19:49:30
news-image

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய...

2025-02-07 19:36:30
news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

2025 யாழ் ரத்னா விருதிற்கான விண்ணப்பம்...

2025-02-07 21:11:47
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதி...

2025-02-07 20:27:42