ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் பிரதியமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி பெருந்தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சராகவிருந்த நிமல் லன்சா, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும், கடற்தொழில் மற்றும் நீர் வள பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் மேற்கொண்ட காஞ்சன விஜேசேகர, தேயிலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும்,  பொதுநிர்வாகம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் மேற்கொண்ட இந்திக அனுருத்த வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்மூலம் நியமிக்கப்பட்டுள்ள புதிய இடைக்கால அரசாங்கத்தில் 16 அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளதுடன், பிரதியமைச்சர்கள் என எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.